12/02/2025

Learn - Earn 1.0 - வணிக பயிற்சி

Rotary Club of Sivakasi Town & Rotary Club of Virudhunagar இணைந்து நடத்திய Learn - Earn 1.0 பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். 
Jc. பாலசுப்ரமணியம் சார் அவர்களுடைய 3 மணி நேர பயிற்சியில் 
1. லீடர் என்பவர் யார் 
2. வணிக லீடர் என்பவர் யார் 

தொழில்கள் தோப்பதில்லை தொழில் முனைவோர்களே தோற்கின்றனர்

Toyota நிர்வாகம் பயன்படுத்தும் வணிக யுத்திகளை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். 

வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த Rtn. சண்முக நடராஜ் அவர்களுக்கு நன்றி

05/02/2025

நம் உடல்

இன்று என்னைக் கவர்ந்த whatsapp மெசேஜ் 

மண்கலம் கவிழ்ந்த போது வைத்து வைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவார்
நன்கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார்
எண்கலந்து நின்ற மாயம்என்ன மாயம் ஈசனே.

மண்பானை கவிழ்ந்து உடைந்து போனால் அது தேவைப்படும் என எடுத்து அடுக்கி வைப்பார்கள். வெண்கலப் பானை வீழ்ந்து நசுங்கிப் போனால் அது வேணும் என்று பாதுகாப்பார்கள். ஆனால் நமது உடம்பை விட்டு உயிர் போய் கிடக்கும் போது அதனைப் பிணம் என்று இகழ்ந்து அது கிடந்தால் நாறும் எனக் கூறி குழிவெட்டி அதனில் போட்டு மூடிவிடுவார்கள். இப்படி ஒரு காசுக்கும் கூட உதவாத என் எண்சாண் உடம்பில் நீ நின்று ஆடிய மாயம்தான் என்ன மாயமையா ஈசனே!!!

04/02/2025

நாட் குறிப்பு

இன்றிலிருந்து தினசரி நாட்குறிப்பு எழுத உள்ளேன்.
தினசரி பழக்கவழக்கமான 
1. நேரம் தவறாமை
2. தியானம்
3. சுயபிரகடனம்
4. புக் படித்தல்
5. உடற்பயிற்சி
உடன் இணைந்து சாதிக்க உள்ளேன். 

03/02/2025

2025 ஆண்டிற்கான செயல் திட்டம்

எனது உடல் எடை 70kg 
6 pack உடற்கட்டு
தினசரி உடற்பயிற்சியுடன் சேர்ந்த பேட்மிட்டன் விளையாட்டு 

சுய முன்னேற்ற புக் பத்து படிக்க வேண்டும்.
மேடைப்பேச்சு மற்றும் நண்பர்களுடன் பேசும் விதத்தை மேலும் மெருகூட்டல்

வியாபாரத்தின் வளர்ச்சி 30 %
Jcom Sivakasi இல் 300 பார்ட்னர்கள்